தீவு சம்பந்தமான பிரச்சினை தொடர்பாக சீனா மற்றும் ஜப்பான் இடையே பதற்றம் நிலவி வருகின்றது.
இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே எல்லை பிரச்சினை நடந்து கொண்டிருக்கிறது. இது ஒருபுறம் இருந்தாலும் சீனா தன்னுடைய அண்டை நாடுகளுடன் தொடர்ந்து வம்பிழுத்து வருகிறது. இந்நிலையில் ஜப்பானுக்கும் சீனாவுக்கும் இடையே தற்போது பதற்றம் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக சீனக் கடலோரப் பாதுகாப்புப் படையின் கப்பல்கள் சென்காகு தீவுகளுக்குள் நுழைந்துள்ளனர். கிழக்கு சீன கடலில் உள்ள இந்த தீவுப்பகுதியில் மக்கள் யாரும் கிடையாது. எனவே ஆளில்லாத தீவிற்குள் சீனா நுழைந்ததற்கு ஜப்பான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதையடுத்து சீனாவின் கடலில் சட்டவிரோதமாக யாராவது நுழைந்தால் அதன் மீது ஆயுத தாக்குதல் நடத்த சீன அரசு சட்டம் இயற்றியுள்ளது. இதனால் சீன மற்றும் ஜப்பான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. மேலும் ஜப்பான் அரசு சென்காகு தீவுகளில் நிர்வகித்து வருகிறது. ஆனால் இந்த தீவுகள் தனக்கு சொந்தமானது என்று சீனா தற்போது சொந்தம் கொண்டாடுகிறது. சீனாவின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளதாகவும், ஜப்பான் தீவிலிருந்து சீனா விரைவில் வெளியேற வேண்டும் என்றும் ஜப்பான் அரசு செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். சீனாவின் இந்த செயல்பாடுகளுக்கு அமெரிக்காவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.