Categories
தேசிய செய்திகள்

“ஜீன்ஸ் பேண்டின் பின் பகுதியில் தேன் கூடு” வியப்பை ஏற்படுத்திய இளைஞர்…. வீடியோ வெளியிட்ட மத்திய அமைச்சர்..!!

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தேன்கூடு ஒருவரின் ஜீன்ஸ் பேண்டில் இருக்கும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

உலகில் தேனை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. அந்த அளவுக்கு தேனின் சுவை அனைவரையும் ஈர்க்கக்கூடிய ஒன்று.. ஆனால் தேனை நேரடியாக எடுப்பது மிகவும் சாதாரண விஷயமல்ல அது மிகவும் சிரமமான விஷயம். தேனீக்கள் பெரிய மரங்களில் அல்லது ஏதாவது முள்வேலி என காட்டுப்பகுதிகளில் என எங்காவது ஒரு இடத்தில் தேன்கூட்டை அமைத்து தேனை சேகரிக்கும்.

Image result for This is really a Beehive in an unlikely place. Kiren Rijiju

ஆனால் இங்கு விசித்திரமாக  தேன்கூடு ஒருவரின் ஜீன்ஸ் பேண்டின் பின் பகுதியில் இருப்பது அனைவரையும் மிகவும் வியப்பையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியது.  மத்திய விளையாட்டுத் துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அத்துடன் இது உண்மையில் சாத்தியமில்லாத இடத்தில் உள்ளது இது நாகலாந்தில் மட்டுமே நிகழும் என்று பதிவிட்டுள்ளார்.

Image result for This is really a Beehive in an unlikely place.

இந்த வீடியோவில் ஒரு இளைஞர் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து இருக்கிறார். அவரின் ஜீன்ஸ் பேண்டின் பின் பகுதியில் தேனீக்கள் பல ஒன்று சேர்ந்து கூட்டினை அமைந்துள்ளது. இந்த வீடியோவை  பார்த்த பலரும் ஆச்சரியத்துடன் வியப்புடனும், வித்தியாசமாகவும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இந்த ஜீன்ஸ் பேண்டை அந்த இளைஞர் எங்கிருந்து எடுத்தார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். தேனீ வளர்ப்பது நாகலாந்தில் பெயர் போனது என்றாலும் இப்படியும் கூட விசித்திரமாக நடக்குமா என மக்கள் தங்களது சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்.

 

Categories

Tech |