Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இனி அதுவும் தமிழ் தான்…. கெத்து காட்டி றெக்கை கட்டி பறக்கும் தமிழ் ….!!

விமானங்களில் தமிழ் உள்ளிட்ட உள்ளூர் மொழிகளில் அறிவிப்புகள் வெளியிட உத்தரவிட்டுள்ளதாக மத்திய விமான போக்குவரத்துத் துறை இணையமைச்சர் ஹர்தீப் பூரி தெரிவித்துள்ளார்.

விமான நிலையங்களில் ஆங்கிலம் அல்லாமல் மற்ற உள்ளூர் மொழிகளிலும் அறிவிப்புகள் வெளியிட வேண்டும் என கோரிக்கை எழுந்துவந்தது. இந்நிலையில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் மத்திய விமான போக்குவரத்துத் துறை இணையமைச்சர் ஹர்தீப் பூரிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

அந்த கடிதத்தில், சென்னை விமான நிலையத்தில் உள்நாடு, வெளிநாடு விமானங்களில் தமிழில் அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இந்த கடிதத்திற்கு தற்போது மத்திய அமைச்சர் ஹர்தீப் பூரி பதிலளித்துள்ளார்.

அதில், விமானங்களில் ஹிந்தி, ஆங்கிலம் அல்லாத உள்ளூர் மொழிகளில் அறிவிப்பு வெளியிட மத்திய விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிவுறுத்தி உள்ளதாகவும், இனி எவ்வித சமரசமும் செய்து கொள்ளாமல் விமானங்களில் தமிழ் மொழியில் அறிவிப்பு வெளியிடலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |