நடிகர் ரஜினிகாந்த் – பியர் கிரில்ஸ் இணைந்து நடித்துள்ள மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சி இன்று ஒளிபரப்பாகிறது.
தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் மேன் வெர்சஸ் வைல்ட் என்ற தொலைக்காட்சித் தொடரில் பியர் கிரில்ஸ்சுடன் இணைந்து நடத்திருந்தார். இதன் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலம் பண்டிப்பூர் வனப் பகுதியில் நடைபெற்றது . படப்பிடிப்பு தொடங்கிய நாள் முதலே இந்த நிகழ்ச்சி மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு மிகுந்த அளவில் அதிகரித்தது.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சி இன்று இரவு 8 மணிக்கு டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகிறது. இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், இது என் வாழ்க்கையின் சாகச அனுபவங்களில் ஒன்று. இந்த நிகழ்ச்சியை நான் பார்த்ததைப் போலவே நீங்கள் அனைவரும் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன் என பதிவிட்டு பியர் கிரில்ஸ் மற்றும் டிஸ்கவரி சேனலுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
One of the most adventurous experiences of my life !! Hope you all enjoy watching this show as much as I did being on it !!!#IntoTheWildWithBearGrylls @BearGrylls thank you so much my friend @DiscoveryIN 👍🏻🙏🏻
— Rajinikanth (@rajinikanth) March 23, 2020