அண்டார்டிகாவில் மிகப் பெரிய பனிக்கட்டி வெடிப்பு ஏற்பட்டு உள்ளதால் அதிகமான பனிக்கட்டிகள் வெளியேறும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
பூமியில் தற்போது ஆங்காங்கே பருவநிலை மாற்றம் அடைந்து வருகிறது. அந்த வகையில் அண்டார்டிகாவில் பனிப்பாறைகள் மற்றும் அடுக்குகள் உருவாகி இருக்கிறது. அதனால் நாளுக்கு நாள் கடல் நீரின் மட்டம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில், அண்டார்டிகாவில் முன்பு ஏற்பட்ட பனிக்கட்டி வெடிப்பை விட மிகப்பெரிய அளவிலான பனிக்கட்டி வெடிப்பு தற்போது நியூயார்க் சிட்டியில் உருவாகியுள்ளது.
இந்த மிகப் பெரிய பனிக்கட்டி வெடிப்பு பிரிட்டிஷ் அண்டார்டிக் சர்வே ஆராய்ச்சி மையத்தின் அருகே ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த வெடிப்பு 1270 சதுர கிலோ மீட்டர் அளவிற்கு உள்ளது. இந்த பனிக்கட்டி வெடிப்பின் அளவு மிகப் பெரியதாக இருப்பதால் மேற்கொண்டு வெடிப்பு ஏற்பட்டால் அதிகமான பனிக்கட்டிகள் வெளியேறும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதனால் பிரிட்டிஷ் அண்டார்டிக் சர்வேயில் பணிபுரிந்து கொண்டிருந்த 12 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் அங்குள்ள நிலைமையை பிரிட்டிஷ் அண்டார்டிகா சர்வே கவனித்து வருகிறது.