Categories
சினிமா தமிழ் சினிமா

“இதுதான் நான் எதிர்கொண்ட சவால்”…. “தலைவி” படத்தில் நடித்த கங்கனா ரனாவத் ட்விட்…!!

ஜெயலலிதாவின் தலைவி படத்திற்காக தான் எதிர்கொண்ட சவாலை நடிகை கங்கனா ரனாவத் புகைப்படங்களுடன் வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து “தலைவி” என்ற திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரணாவத் நடித்துள்ளார். மேலும் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தில் நடித்த கங்கனா ரணாவத் அவர் எதிர்கொண்ட சவால்களை பற்றி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, இன்னும் தலைவி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டிற்க்கு ஒரு நாள் தான் உள்ளது.

Image

இந்த படத்திற்காக நான் எதிர்கொண்ட சவால் ஒன்றே ஒன்றுதான். அது, எனது உடல் எடையை 20 கிலோ அதிகரித்ததும், அதனை சில மாதங்களிலேயே குறைத்ததுமாகும்” என்று பதிவிட்டு சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

Categories

Tech |