Categories
அரசியல் மாநில செய்திகள்

நீங்க உங்க வேலைய பாருங்க”நாங்க முதல கொடுக்குறோம்” இது அதிமுகவின் சதி …. அழகிரி பரபரப்பு பேட்டி …!!

திமுகவினர் மீது வழக்குப்பதிவு ஆளும் கட்சியின் சூழ்ச்சி என்று தமிழ்நாடு காங். தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

நாங்குநேரி இடைத்தேர்தலை முன்னிட்டு நெல்லையில் முகாமிட்டுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறும் போது , “மாநில அரசு ஏராளமான பணத்தை இந்தத் தொகுதியில் கொடுத்துள்ளனர். அவர்கள், ‘நாங்கள் எல்லாம் கொடுத்து முடித்த பிறகு அலுவலர்கள், காவல் துறையினர், தேர்தல் ஆணையம் நீங்கள் உங்கள் வேலையைத் தொடரலாம்’ என்று சொன்னதும் இவர்கள் யாரையோ பிடிக்கிறார்கள்.

இது ஆளுங்கட்சியின் சூழ்ச்சியாக கூட இருக்கலாம்” என்று பதிலளித்தார்.தொடர்ந்து ராஜிவ் காந்தி படுகொலை குறித்து சீமான் பேசிய கருத்து குறித்து கேள்விக் கேட்கப்பட்டது. அதற்கு, ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஏழு பேரையும் நீதிமன்றம் விடுதலை செய்வதில் எந்தவித ஆட்சேபனையும் இல்லை. இலங்கை தமிழர் பிரச்னையில் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்களுக்கு சீமான் போன்றோர் செய்ததை விட காங்கிரஸ் கட்சி அதிகம் செய்துள்ளது என்றார்.

Categories

Tech |