Categories
சினிமா தமிழ் சினிமா

”இது தலைவர் திருவிழா”…. அண்ணாத்த ட்ரைலரை புகழ்ந்த தனுஷ்…. ட்விட்டர் பக்கத்தில் பதிவு…!!

அண்ணாத்த படத்தின் ட்ரைலரை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் புகந்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர். இவர் இயக்குனர் சிவா இயக்கத்தில் தற்போது ”அண்ணாத்த” படத்தில் நடித்துள்ளார். தீபாவளிக்கு வெளியாகும் இந்த படத்திற்கு ரசிகர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர். சமீபத்தில், இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த ட்ரெய்லர்  சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. பல திரையுலக பிரபலங்களும் இந்த ட்ரெய்லரை புகழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் தனுஷ் தனது சமூக வலைதளப்பக்கத்தில், ”இந்த படத்தை திரையில் பார்க்க காத்திருக்கிறேன், இது தலைவர் திருவிழா” என்று புகழ்ந்திருக்கிறார்

Categories

Tech |