Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“உலகிலேயே இதுதான் மிகவிலை உயர்ந்த காய்கறி”… என்ன தெரியுமா..? விலையை கேட்ட அதிர்ந்து போய்டுவீங்க..!!

சிம்லாவில் விளையும் குச்சி காளான் தான் உலகிலேயே மிக விலை உயர்ந்த காய்கறியாம். அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்.

சிம்லாவில் விலையும் காளான் உங்களுக்கு கிடைத்தால் உங்களுக்கு 30,000 முதல் 35 ஆயிரம் வரை கிடைக்கும். ஏனெனில் அதை அவ்வளவு விலை கொடுத்து வாங்க கூட ஆள் உள்ளார்களாம். இதுகுறித்த விழிப்புணர்வு என்ன என்பது பற்றி சரியாக தெரியவில்லை. பெரும்பாலும் ஹிமாச்சல பிரதேசம் ஆன சம்பா,குல்லு, சிம்லா, மணாலி ஆகிய மாவட்டங்களில் அடர்த்தியான காடுகளின் நடுவே இந்த குச்சி காளான்கள் விளையும். இதனை வளர்க்க முடியாது. 18 முதல் 27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வளரும்.

மேலும் சராசரியாக இரண்டு முதல் ஏழு செண்டி மீட்டர் அகலமும், 2 முதல் 10 சென்டிமீட்டர் நீளமும் வளரும். உடலில் பல்வேறு நோய்களை தடுக்கும் ஆன்டி ஆக்சிடென்ட்கள் இதில் அதிக அளவில் உள்ளதால் இதற்கு இவ்வளவு விலை கிடைக்கின்றது. பிப்ரவரி மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை ஹிமாச்சல பிரதேசம் விவசாயிகள் குச்சி காளான் வேட்டைக்கு செல்வார்கள். ஊரில் வருடம் முழுவதும் ஈட்டும் வருமானத்தில் குறுகிய காலத்தில் இந்த காளான் வேட்டையில் சம்பாதித்து விடலாம். இந்தப் பணம் காய்க்கும் காளான் எப்படி வேட்டையாடுவது என்பதை யாரும் கூற மறுக்கிறார்கள்.

Categories

Tech |