Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இது அம்மாவின் அரசு…. ”வல்லரசு நாட்டை விட சூப்பர்” ஒப்பிட்டு மாஸ் காட்டிய EPS ..!!

அம்மாவின் அரசு எடுத்த முயற்சியின் காரணமாக இந்த வைரஸ் பரவல் கட்டுக்குள் இருக்கிறது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்தார்.

இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதுகுறித்து அவர் பேசும் போது, கொரோனா பரவலை தடுப்பதற்காக 6 முறை மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்று இருக்கின்றன. ஒவ்வொரு முறை மாவட்ட ஆட்சியர் ஆலோசனை கூட்டத்தில் பெறப்பட்ட கருத்தின் அடிப்படையில் செயல் பட்டதன் விளைவாக இன்றைக்கு கொரோனா வைரஸ் பரவல் தடுக்கப்பட்டுள்ளது. இன்றைய சூழ்நிலையில் இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது.

வெளிநாட்டிலிருந்து வருவதன் மூலமாகவும், வெளி மாநிலத்திலிருந்து வருவதன் மூலமாகவும் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் படிப்படியாக குறைக்கப்பட்டது.சென்னை மாநகரம் மக்கள் தொகை அதிகமுள்ள நகரம். குறுகலான தெருக்கள் அதிகமாக இருக்கின்றன. நெரிசலான வீடுகள் அதிகம் இருக்கின்றன. ஒரே வீட்டில் பலபேர் வசிக்கின்றார்கள். இதனால் வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருகின்றது. இருந்தாலும் அதை கட்டுப்படுத்துவதற்கு அரசு உரிய முறையில் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இன்றைக்கு மாண்புமிகு அம்மாவின் அரசு எடுத்த முயற்சியின் காரணமாக இந்த வைரஸ் பரவல் கட்டுக்குள் இருக்கிறது. வல்லரசு நாடுகள், வளர்ந்த நாடுகளில் கூட உயிரிழப்பு அதிகமாக இருந்தது. ஆனால் தமிழகத்தைப் பொருத்தவரை நம்முடைய மருத்துவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளித்ததன் காரணத்தால் இறப்பு விகிதம் குறைந்து இருக்கின்றது. அதோடு சிகிச்சை பெற்று குணமடைந்த ஒரு எண்ணிக்கை சுமார் 50% இருக்கிறது. இதனால் நாம் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை. இருந்தாலும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

கொரோனாவுக்கு ஒரே மருந்து ஒவ்வொருவரும் தன்னுடைய கடமையை உணர்ந்து,  அரசு சொல்லுகிற வழிமுறைகளை பின்பற்றினால் இந்த வைரஸ் பரவலை தடுக்க முடியும். பொதுமக்களுடைய ஒத்துழைப்பின் மூலமாகத்தான் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முடியும். பொதுமக்களுடைய ஒத்துழைப்பு மிகமிக முக்கியம். இதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை, மருந்து கண்டுபிடித்து இருந்தால் எளிதாக பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து குணமடையச் செய்ய முடியும். ஆனால் மருந்து கண்டு பிடிக்காத சூழ்நிலையில் நம்முடைய மருத்துவர்களுடைய கடும் முயற்சியின் காரணமாக, உரிய முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து அதிகமானோரை குணமடைய செய்கின்றோம்.

Categories

Tech |