அர்ஜெண்டினாவில் உலகிலேயே மிகப் பழமையான டைனோசரின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அர்ஜெண்டினாவில் நேற்று உலகிலேயே மிகப் பழமையான டைனோசர் வகைகளில் ஒரு டைனோசரின் எலும்பு கூட்டை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது, இந்த டைனோசர்கள் 140 மில்லியன் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்திருக்கும்.
இதற்கு நீண்ட கால்கள் மற்றும் நீண்ட கழுத்துகள் உள்ளது. மேலும் இந்த டைனோசர் செடி கொடிகளை சாப்பிட்டு உயிர் வாழும் நிஞ்ஜாட்டியன் சபாடாய் வகையை சேர்ந்தது ஆகும். இந்த வகை டைனோசர்கள் தான் முதன் முதலாக அழிந்து போயிருக்கும் என்று கூறினார். மற்றொரு ஆராய்ச்சி எழுத்தாளரான பப்லோ கல்லினால் இது பற்றி கூறியதாவது, டைனோசர்களின் புதைபடிவங்கள் ஆங்காங்கே கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.
தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள டைனோசரின் அடி 65 ஆகும்.ஆனால் இதற்கு முன்னதாக கண்டுபிடிக்கப்பட்ட டைனோசர்களின் அடி 115 வரை இருந்துள்ளது. இருப்பினும் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள டைனோசர்களை விட இதுவே மிகவும் பழமையானது என்று தெரிவித்துள்ளார்.