சுந்தர்.சி தான் என் பயத்தை போக்கினார் என ஆர்யா கூறியுள்ளார்.
இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா, ராஷிகண்ணா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால் ஆகியோர் நடிப்பில் ஆயுதபூஜையை முன்னிட்டு திரையரங்கில் வெளியான திரைப்படம் ”அரண்மனை 3”. அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில் குஷ்பு தயாரித்திருக்கும் இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் மூலம் வெளியிட்டார்.
இப்படம், ரசிகர்களின் வரவேற்பை பெற்று திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப்படத்தை பற்றி ஆர்யா கூறும்போது, நான் திகில் படங்களை பார்த்தது இல்லை எனவும், திகில் படம் பார்ப்பதற்கு எனக்கு பயம் என்றார். இயக்குனர் சுந்தர்.சி இந்த படத்தில் நடிப்பதற்கு எண்னிடம் கேட்டபோது, நான் முதலில் மறுத்தேன். பின்னர், தலையை கீழே சாய்த்து கண் விழித்து பார்த்தால் போதும், நான் பேய் படமாக எடுத்து விடுவேன் என்று சொல்லி என் பயத்தை போக்கினார். அதன் பிறகு தான் இந்த படத்திற்கு சம்மதித்தேன் என்று ஆர்யா கூறினார்.