இட்லி, தோசை, பணியாரம், சப்பாத்தி ஆகியவற்றிற்கு ஏற்ற காரசாரமான கார சட்னி செய்யலாம் வாங்க .
தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் – 5
தக்காளி – 1
பூண்டு – 3
எண்ணெய் – தேவைக்கேற்ப
கடுகு – 1/4 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு – 1/4 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப
கறிவேப்பிலை – தேவையான அளவு
செய்முறை:
முதலில் சின்ன வெங்காயம் , தக்காளி, பூண்டு , மிளகாய்த்தூள், தேவையான உப்பு அனைத்தையும் சேர்த்து பச்சையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு , கறிவேப்பிலை மற்றும் அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி இறக்கினால் சுவையான கார சட்னி தயார்!!!