முரசொலி இருக்கும் பஞ்சமி நிலம் என்று மருத்துவர் அய்யா நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயார் என்று ஸ்டாலின் ராமதாஸ்_க்கு பதிலடி கொடுத்துள்ளார்.
தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் நான்காவது படமாக சமீபத்தில் வெளிவந்திருக்கும் படம் அசுரன். பிரபல எழுத்தாளர் பூமணியின் ”வெக்கை” நாவலை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ள இந்தப் படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் மஞ்சு வாரியார், அம்மு அபிராமி, பசுபதி, பாலாஜி சக்திவேல், கென் கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். படத்தில் சர்ச்சையான காட்சிகள் இருப்பதாகக் கூறப்பட்டாலும் பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் நாங்குநேரி இடைத்தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்ற ஸ்டாலின் தூத்துக்குடியில் உள்ள தியேட்டரில் அசுரன் படம் பார்த்து அந்த படம் குறித்து தனது பாராட்டதை தெரிவித்து இருந்தார். இதுகுறித்து தனது ட்விட்டரில், ‘அசுரன் படம் மட்டுமல்ல பாடம். பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து, சாதிய சமூகத்தைச் சாடும் – சாதி வன்மத்தைக் கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்! கதைகளம் வசனம் என வென்று காட்டியிருக்கும் இயக்குநர் வெற்றிமாறனுக்கும் வாழ்ந்து காட்டியிருக்கும் நடிகர் தனுஷுக்கும் பாராட்டுகள்’ என்று கூறினார்.
#Asuran – படம் மட்டுமல்ல பாடம்!
பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் – சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்!
கதை-களம்-வசனம் என வென்று காட்டியிருக்கும் @VetriMaaran-க்கும் வாழ்ந்து காட்டியிருக்கும் @dhanushkraja-வுக்கும் பாராட்டுகள் pic.twitter.com/i6PYyRTPfV
— M.K.Stalin (@mkstalin) October 17, 2019
மேலும் அசுரன் பட இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் தனுஷ் ஆகியோருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் தொலைபேசி வாயிலாகவும் வாழ்த்து கூறியிருக்கிறார்.இதனிடையே ஸ்டாலின் ட்வீட்டிற்கு மறு ட்வீட் செய்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், அசுரன் படத்தை பார்த்துவிட்டு ‘ஆஹா, அற்புதம் என கருத்து தெரிவிக்கும் ஸ்டாலின், முரசொலி அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என்று நம்புவோம்’ குறிப்பிட்டிருந்தார்.
பஞ்சமி நில மீட்பு குறித்து பேசும் அசுரன் படம் அல்ல… பாடம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் – ஆஹா…. அற்புதம்… அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று, முரசொலி அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என்று நம்புவோம்!
— Dr S RAMADOSS (@drramadoss) October 17, 2019
இந்நிலையில் ராமதாஸ் ட்வீட்_டுக்கு பதிலளிக்கும் வகையில் திமுக தலைவர் தனது ட்வீட்_டர் பக்கத்தில் அடுத்தடுத்து இரண்டு ட்வீட் செய்துள்ளார். அதில் 1. ) மருத்துவர் ராமதாஸ் அவர்கள், தற்போது “முரசொலி “ இருக்கும் இடத்தை பஞ்சமி நிலமென்று பச்சையாகப் புளுகியிருக்கிறார்.! அது பஞ்சமி நிலமே அல்ல; வழி வழியாகத் தனியாருக்குச் சொந்தமாகப் பாத்தியப்பட்ட பட்டா- மனை! என்று பதிவிடுள்ள ஸ்டாலின் பட்டாவையும் பதிவிட்டுள்ளார்.
அதே போல மற்றொரு ட்வீட்_டில் நான் சொல்வது பொய்; அது பஞ்சமி நிலம் என்று மருத்துவர் அய்யா நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயார்! அவர் சொல்வதை நிரூபிக்கத் தவறி, அது பச்சைப் பொய்யென்றால், அவரும், அவர் மகனும் அரசியலை விட்டு விலகத் தயாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
நான் சொல்வது பொய்; அது பஞ்சமி நிலம் என்று மருத்துவர் அய்யா நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயார்!
அவர் சொல்வதை நிரூபிக்கத் தவறி, அது பச்சைப் பொய்யென்றால், அவரும், அவர் மகனும் அரசியலை விட்டு விலகத் தயாரா?
— M.K.Stalin (@mkstalin) October 18, 2019