Categories
அரசியல் மாநில செய்திகள்

எல்லாத்துக்குமே காரணம் இதான் …! திபுதிபுவென இறங்கிய VCK… செம ஷாக்கில் RSS ..!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், 50 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த விண்ணப்பம் செய்தார்கள்.  அவர்களால் ஆதார் அட்டைகளை காண்பிக்க முடியவில்லை, உறுப்பினர் அட்டைகளை காண்பிக்க இயலவில்லை, அவர்களின் முகவரி என்ன ? பொறுப்பாளர்கள் யார் யார் ? மாவட்ட அளவிலான பொறுப்பாளர்கள், ஒன்றிய அளவிலான பொறுப்பாளர்கள், முகாம் அல்லது கிளை அளவிலான பொறுப்பாளர்கள் பட்டியலை உயர்நீதிமன்றம் கேட்டது. ஆனால் அவர்களால் தர முடியவில்லை, இதுதான் இன்றைக்கு எதார்த்தமான உண்மை.

எனவே நாங்கள் இந்து சமூகத்திற்கு பாதுகாப்பு அளிக்கக்கூடிய வகையில் இந்துக்களின் நலன்களை முன்னிறுத்தி அவர்களுக்கு விழிப்புணர்வை ஊட்டுவதற்காகவே இந்த புத்தகத்தை விலை இல்லாமல் வழங்குகிறோம். இந்த விழிப்புணர்வை 1927-ல் டிசம்பர் 25ஆம் நாள் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் இதனை எரித்து நாட்டு மக்களுக்கு உணர்த்தினார். இது எரிக்கப்பட வேண்டிய நூல், கொளுத்தப்பட வேண்டிய நூல், சாம்பலாக்கப்பட வேண்டிய நூல், இதுதான் இந்துச் சமூகத்தில் இன்றைக்கு இவ்வளவு பாகுபாடுகளையும், பெண்களுக்கு எதிரான ஒடுக்கு முறைகளையும் நடைமுறைப்படுத்தி வருகிறது.

பிராமணர், சத்ரியர், வைசியர், சூத்திரர் என்று இந்த சமூகத்தை மனித குலத்தை பல வருணங்காளாக பாகுபடுத்தி இருக்கிறது. ஒவ்வொரு வர்ணத்திற்குள்ளும் ஆயிரக்கணக்கான சாதிகளை உருவாக்கி,  சாதிகளுக்கு இடையே பாகுபாடுகளை நிலை நிறுத்தி இருக்கிறது. இதற்கு அடிப்படையாக இருக்கின்ற கோட்பாடாக தான் இந்த மனுஷ்மிருதி இருக்கிறது என்பதை புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் தன்னுடைய செயல்பாட்டின் மூலம் உலகுக்கு உணர்த்தினார்.

அவர் எரித்தார், நாங்கள் அதை மக்களுக்கு எடுத்து வழங்குகிறோம்.  மக்கள் படிக்க வேண்டும், பெண்களைப் பற்றி, சூத்திரர்களை பற்றி, என்ன சொல்லுகிறது ? என்பதுதான் இந்த புத்தகத்தின் தலைப்பு.  மனுஷ்மிருதி தான் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அரசியல் கொள்கை அறிக்கை என்கின்ற முன்னுரையோடு 32 பக்கங்களை கொண்ட இந்த சிறு நூலை இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் பொதுமக்களுக்கு விநியோகிக்கிறோம் என தெரிவித்தார்.

Categories

Tech |