Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

விபத்துக்கு இதுதான் காரணமா…! இனி பெண்களோடு பேசக்கூடாது….. மீறினால் சஸ்பெண்ட்….!!

கோவையில் அரசு பேருந்தை ஓட்டும் டிரைவர்கள்  பெண்களிடம் பேச கூடாது என்று வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கோவையில் அரசு பேருந்து விபத்தில் சிக்காமல் இருப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மாதம்தோறும் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கோவை மண்டல அரசு போக்குவரத்து கழக மேலாளர் மகேந்திரன் தற்போது புதிய சில விதிமுறைகளை வாய்மொழியாக அறிவித்துள்ளார். அதில் கோவையில் மொத்தம் 2500 பேருந்துகள் கோவை மண்டல அளவில் சுமார் 2,700 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

அவ்வபோது கோவை மாநகருக்கு உள்ளே சில விபத்துகளும் அரசுப் பேருந்துகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. இதனை முற்றிலும் தடுக்க வேண்டும். அதன்படி, அரசு பேருந்தை ஓட்டுபவர்கள் உரிய நேரத்தில் வாகனத்தை பேருந்தை இயக்க ஆரம்பித்து நேரத்தில் ஓட்டிச்சென்று பணியையும் சரியாக முடிக்க வேண்டும். அதேபோல் எக்காரணத்தைக் கொண்டும் அதிவேகம் கூடாது.

கவனக் குறைவுடன் பேருந்து இயக்கக் கூடாது என்று தெரிவித்தனர். மேலும் ஒரு சில டிரைவர்கள் பெண்களை இன்ஜின் பேனட் மீது அமர வைத்தும், முன்னால் இருக்கக்கூடிய கண்டக்டர் இருக்கையில் பெண்களை அமர வைத்தும் பேசிக்கொண்டே வாகனம் ஒட்டி செல்வதாகவும், இதனால் கவனக்குறைவு ஏற்பட்டு விபத்துக்கள் ஏற்படுவதாகவும் சில சமூக ஆர்வலர்கள் போக்குவரத்து கழகத்தில் புகார் அளித்துள்ளனர்.

ஆகையால் டிரைவரும், கண்டக்டரும் இன்ஜின் பேனட் மீது பெண்களை அமர அனுமதிக்கக்கூடாது. முன் இருக்கையில் பெண்கள் அமர்ந்து இருந்தாலும் அவர்களிடம் பேசக்கூடாது என்று கூறியுள்ளார். மேலும் வாகனத்தை ஓட்டும் டிரைவர்கள் அவர்களது சட்டைப்பையில் பையில், கையில் மொபைல் வைத்திருக்க கூடாது என்று வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவுகளை மீறினால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் முதற்கட்டமாக தற்காலிக பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |