Categories
உலக செய்திகள்

டைனோசர்கள் அழிவுக்கு இதுதான் காரணம்… விஞ்ஞானிகள் தெரிவித்துள்ள புதிய தகவல்…!

பூமியில் டைனோசர் எப்படி அழிந்திருக்கும் என்ற தகவலை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

பூமியில் ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசர்கள் குறுங்கோள் மோதல் காரணமாக உயிரிழந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர். ஆனால் தற்போது இதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வில், வால் நட்சத்திரத்தால் தான் டைனோசர்கள் அறிந்திருக்கக் கூடும் என்று ஹார்வர்டு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

ஏனென்றால், வியாழன் கிரகத்தால் வால் நட்சத்திரம் ஒன்று தூண்டப்பட்டது. அந்த வால் நட்சத்திரம் சூரியனை நோக்கி ஈர்த்து செல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது. அப்படி சூரியனுக்கு அருகில் சென்ற வால் நட்சத்திரம் வெப்பம் தாங்காமல் உடைந்தது. வால் நட்சத்திரத்தின் ஒரு பகுதி பூமியில் மோதி இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அப்படி பூமியில் வந்து மோதிய வால் நட்சத்திரம் மெக்ஸிகோ கடற்கரையில், 94 மைல் நீளத்தில், 12 மைல் ஆழம் கொண்ட பள்ளத்தை உருவாக்கி இருக்கும். அதனால் சுனாமி, இருட்டு, தாவரங்கள் அழிதல் போன்ற காரணிகள் ஏற்பட்டதால் டைனோசர் இனமே அழிந்து போயிருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தற்போது தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |