Categories
சினிமா தமிழ் சினிமா

50 வயதிலும் இளமையாக இருக்க இதுதான் காரணம்…. ரகசியத்தை போட்டுடைத்த நடிகை தபு….!!!

தனது அழகின் ரகசியத்தை பேட்டி ஒன்றில் நடிகை தபு கூறியுள்ளார். 

தமிழ் சினிமாவில் காதல் தேசம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், தாயின் மணிக்கொடி போன்ற படங்களில் நடித்து  பிரபலமானவர் நடிகை தபு. இவர் தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்தார். 50 வயது ஆகியும் இன்னும் இவர் திருமணம் செய்து கொள்ளாமல் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

திருமணம் செய்யாதமைக்கு நடிகை தபு கூறிய காரணம்!!!! - tamilnaadi.com

இந்த வயதிலும் இவரின் அழகு குறையவில்லை என ரசிகர்கள் ஆச்சரியப்படுகின்றனர். இதனையடுத்து தனது அழகின் ரகசியத்தை பேட்டி ஒன்றில் நடிகை தபு கூறியுள்ளார். அதில், ”எனது அழகின் உண்மையான ரகசியம் மனம் தான். மனதில் சந்தோஷம் மற்றும் நிம்மதியான உறக்கம் இருந்தாலே அழகு தானாக வந்துவிடும்”. மேலும், எவ்வளவு வயதானாலும் அந்த அழகு குறையவே குறையாது என தப்பு கூறியுள்ளார். மேலும் எனக்கு இப்போதும் நிறைய படங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன எனவும் கூறியுள்ளார்.

Categories

Tech |