ஸ்பெயினில் கொரோனா நோய் தொற்று அதிகம் பரவியதற்கு காரணம் அவர்களது வாழ்க்கை முறையே காரணம் என ஆய்வு ஒன்றில் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பாதிப்பு அமெரிக்கா, ஸ்பெயின், இந்தியா உள்ளிட்ட 200 நாடுகளுக்குக்கும் மேல் பரவியது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தொற்று தாக்கத்தில் இருந்து மீள முடியாமல் அனைத்து நாடுகளும் தவித்து வருகின்றன. இந்த நிலையில், உலகளவில் கொரோனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் 2,850,387 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், உயிரிழப்புகள் எண்ணிக்கை 1லட்சத்து 98 ஆயிரத்து 096 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை உலகளவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்தை தூண்டியுள்ளது. மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 12 ஆயிரத்து 303 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், கொரோனாவால் அதிகம் பாதித்த நாடான அமெரிக்காவில் இதுவரை 9 லட்சத்து 25 ஆயிரத்து 758 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனவால் 52,217 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். கொரோனா பிடியில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 10 ஆயிரத்து 432 ஆக அதிகரித்துள்ளது.
ஸ்பெயினில் 219,764 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை, 22,524 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல, 92,355 பேர் குணமடைந்துள்ளனர். இந்தநிலையில், ஸ்பெயின் நாட்டில் கொரோனா அதிகம் பரவியதற்கு காரணம் அவர்களின் வாழ்கை முறைதான் காரணம் என கருது பரவி வருகிறது. கட்டித் தழுவுதல், முத்தமிடுதல் போன்ற சமூகவாழ்க்கை முறை, குடும்பத்திலுள்ள மூத்தோர், இளம்தலைமுறையினர் இடையே நிலவும் அதிக நெருக்கம், வழக்கத்துக்கு மாறான வெப்பநிலை, நிலையற்ற சுகாதார அமைப்பு ஆகியவை நோய் தொற்று பரவ அதிக காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.