Categories
மாநில செய்திகள்

10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த இதுவே சரியான நேரம் – நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

தமிழகத்தில் ஊரடங்கால் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கபட்ட நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் மாதம் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா அச்சுறுத்தல்களுக்கு இடையே தேர்வு நடைபெற இருப்பதால் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

வழக்கு விவரம் :

இந்த நிலையில் இந்த தேர்வை ஒத்திவைக்க வேண்டும் எனக்கூறியும், மேலும் 2 மாதகாலத்திற்கு ஒத்திவைக்கவேண்டும் எனக் கோரி உயர்நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. தேர்வினை ரத்து செய்யவேண்டும் எனவும் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்குகள் அனைத்தும் இன்று நீதிபதி வினித் கோத்தாரி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அரசுக்கு கேள்வி :

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் 10ம் வகுப்பு தேர்வை நடத்த அவசரம் காட்டுவது ஏன்? என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினர். ஜூன் 15ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த அனுமதிக்க முடியாது என்று அதிரடியாக கூறியுள்ளனர். மேலும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை ஜூலையில் நடத்தலாமா? என்பது குறித்து இன்று பிற்பகல் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர். பொதுத்தேர்வு வழக்கில் அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு விளக்கம் :

இதனை தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண் ஆஜரானார். அப்போது 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த இதுவே சரியான நேரம் என தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் காலத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளதாக தலைமை வழக்கறிஞர் வாதம் செய்து வருகிறார்.

மற்ற மாநிலங்களில் 10ம் வகுப்பு தேர்வை நடத்தி முடித்து விட்டன. மத்திய அரசு தேர்வை நடத்த அனுமதி அளித்துள்ளது என்றும் தமிழகத்தை தேர்வை நடத்த ஐகோர்ட் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் மத்திய அரசு அறிவித்துள்ள நடைமுறைகள் பின்பற்றப்படும் என அரசு உறுதி அளித்துள்ளது.

Categories

Tech |