தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, நடிகர் ஷாம், சினேகா, சங்கீதா, மீனா சரத்குமார், பிரகாஷ் ராஜ், யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீசாகிறது.
இந்நிலையில் இயக்குனர் வம்சி வாரிசு பட குழுவினருடன் எடுத்த செல்பியை பாடகர் கிரிஷ் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை ரசிகர்கள் வாரிசு குடும்பம் என்ற ஹேஷ்டேக்குடன் தற்போது இணையத்தில் வைரல் ஆக்கி வருகின்றனர். மேலும் வாரிசு திரைப்படம் குடும்ப செண்டிமெண்ட் கதையம்சத்தில் உருவாததுடன் இதுவரை பார்க்காத புதிய விஜய்யை பார்க்கலாம் என பட குழுவினர் அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.