‘கைதி’ ஹிந்தி ரீமேக் படத்தின் டைட்டில் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனையடுத்து, இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் ”மாஸ்டர்”. தற்போது நடிகர் கமலஹாசனை வைத்து ”விக்ரம்” படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் ஜூன் 3ம் தேதி ரிலீசாக உள்ளது. இவர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படம் ”கைதி”.
இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி அடைந்தது. தற்போது இந்த திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்த படத்தில் கதாநாயகனாக அஜய் தேவ்கன் நடித்து வருகிறார். இந்நிலையில், இந்த படத்தின் டைட்டில் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு ”போலோ” என பெயரிடப்பட்டுள்ளது.
Proudly announcing my next venture Bholaa, releasing on March 30th, 2023.@ADFFilms @TSeries @RelianceEnt @DreamWarriorpic #DharmendraSharma #Tabu pic.twitter.com/pcghLwHwdm
— Ajay Devgn (@ajaydevgn) April 19, 2022