இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே செல்போன் பயன்படுத்துகிறார்கள். இணையதள சேவையை பயன்படுத்தாமல் ஒரு நாள் கூட கழிவதில்லை என்று தான் கூற வேண்டும். அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் செல்போன் உபயோகம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பன்சி கிராமத்தில் 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் செல்போன் உபயோகப்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை தொடர்பான தீர்மானம் கிராம பஞ்சாயத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் செல்போனை அதிக அளவில் பயன்படுத்துவதால் குற்ற செயல்கள் அதிகரிக்கிறது என்றும், அதை தடுப்பதற்காகவும் தான் செல்போன் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கிராம பஞ்சாயத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும் உத்தரவை மீறி செல்போன் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் பஞ்சாயத்தில் கூறப்பட்டுள்ளது.