Categories
அரசியல் மாநில செய்திகள்

இப்படி பண்ணுறது தான் இவரோட வேலை – முதல்வர் ஆதங்கம்

திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணியை ஒருமையில் பேசியது அமளியை ஏற்படுத்தியுள்ளது.

2_ஆம் நாளான இன்று நடைபெற்று  வரும் தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணியை ஒருமையில் பேசியதாக சலசலப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி பேசும்போது, சட்டப்பேரவை கூட்டத்தொடர் எப்போதெல்லாம்  நடந்தாலும் திமுக உறுப்பினர் ஜெ அன்பழகன் பேரவையில் பிரச்சினையை ஏற்படுத்துவது போன்ற பேச்சுக்கள் தான் பேசுகிறார் என்று குறிப்பிட்ட அவர் தற்போது நடைபெற்று இருக்கக்கூடிய சட்டப்பேரவை கூட்டத்தொடரை  திமுக உறுப்பினர்கள் திசை திருப்ப வேண்டாம் என்று  இப்படி பேசுகிறார்கள் என்று தெரிவித்தார்.

Categories

Tech |