Categories
தேசிய செய்திகள்

இது ஏழைகளுக்கு உதவி செய்ய…. பணக்காரர்களுக்கு அல்ல…. விளக்கமளித்த நிர்மலா சீதாராமன்…!!

டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு வழி செய்திருப்பது ஏழைகளுக்கு உதவி செய்யதான்  பணக்காரர்களுக்கு அல்ல என்று நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.

2020 ஆம் வருடத்திற்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி-1 ஆம் தேதியன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் கடந்த காலங்களில் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அளவிலே பொருளாதார சரிவு ஏற்பட்டிருப்பதால், இந்தியாவில் ஏழ்மையை ஒழிக்க வேண்டும், வளர்ச்சியை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் மாநிலங்களவையில் விளக்கம் அளித்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், “டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு வழி செய்திருப்பது ஏழைகளுக்கு உதவி செய்ய, பணக்காரர்களுக்கு அல்ல.

தொழில்துறை வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பட்ஜெட் அமைக்கப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட்டில் தொழிலதிபர்களுக்கு  ஆதரவாக பட்ஜெட் போல காட்ட எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன. தொழிலதிபர்கள், வருமான வரி செலுத்துபவர்கள் மத்திய அரசு மதிக்கிறது” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |