முந்தைய அரசுக்கும் தற்போதைய அரசுக்கும் உள்ள வித்தியாசத்தை பிரதமர் சுட்டிக்காட்டி பெருமிதம் அடைந்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி மத்தியில் ஆட்சி செய்த பிறகு பல்வேறு புதுப்புது திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்தியாவை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றார். இவருடைய ஆட்சியில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் அகமதாபாத் நகரில் இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியுள்ளார்.
பின்னர் பேசிய அவர் நாடு முழுவதும் ஆயிரம் கிலோ மீட்டருக்கு அதிகமான மெட்ரோ பணிகள் நடந்து வருவதாக கூறினார். மேலும் முந்தைய அரசுக்கும், தற்போதைய அரசுக்கும் வேறுபாடு என்னவென்றால் தற்போதைய அரசாங்கத்தில் நாடு முழுவதும் மெட்ரோ விரிவாக்கம் செய்யப்படுகிறது என்று கூறியுள்ளார்.