நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த நிகழ்வில் பேசிய கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், உழைப்பிலிருந்து வெளியேறிவிட்டால் வந்தவன் இங்கே குடியுரிமை பெற்று இங்கே இருந்து விட்டார்கள் என்றால், அவர்கள் ஒன்றரை கோடி பேர் மோடி ஆட்சி இறங்குவதற்குள்… இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கிறது, அதற்குள் இன்னும் 50 லட்சம் பேரை குடியேற்றி விடுவார்கள், தினம் வருகிறார்கள், தினமும் தொடர் வண்டியில் வந்து இறங்கிக் கொண்டே இருக்கிறார்கள் பல்லாயிரக்கணக்கானோர் வட இந்தியர்கள்…
முன்னாடி எல்லாம் சென்னையில் அங்கங்கே தமிழ் முகங்கள் தெரிகிறது. இப்போ சென்னையில் அங்கேங்கே முழுக்க வட இந்தியர்கள். அதுலயும் அன்னைக்கு பார்த்தால் சாலை ஓரத்தில் மழை நீர் வெளியேற்ற சாலை ஓரத்தில் குழிதோண்டும் வேலை நடந்து கொண்டிருக்கிறது. அங்க பார்த்தால் வேகவேகமா வேலை செய்யுறாங்களாம். அங்க பார்த்தால் வெள்ளக்காரன் டவுசரை போட்டுகொண்டு வேலை பார்த்து கொண்டிருக்கிறார்.
நீங்க வாங்க சென்னைக்கு வாருங்கள், எல்லா இடங்களிலும், சிக்னலில் நான் வண்டியை நிறுத்தும்போது கையேந்தி பிச்சை எடுக்கிற எல்லாரும் வட இந்தியர்கள் தான், இதிலிருந்து என்ன தெரிகிறது ? பிச்சை எடுக்கின்ற வேலை கூட இனி தமிழ்நாட்டில் தமிழனுக்கு இல்லை, அந்த வேலை கூட கிடைக்காது. இதெல்லாம் எவ்வளவு பெரிய பேராபத்து, அவன் என்ன பண்ணுவான் என்றால் ? அவன் இந்த நாட்டின் அரசியலை, இந்த நிலத்தின் அரசியலை ஒரு தேசிய இனத்தின் அரசியலை அவர்கள் தீர்மானிப்பார்கள்.
அவன் யாருக்கு வாக்கு செலுத்துகிறார்களோ அவர்களிடம் அதிகாரம் வரும், அந்த திமிரில் அந்த இதில் தான் பிஜேபி நாங்கள் வருவோம், நாங்கள் வெல்வோம் என்று சொல்கிறது. வட இந்தியர்கள் அத்தனை பேரும், காங்கிரசுக்கு கூட ஓட்டு போட மாட்டார்கள், பிஜேபிக்கு தான் போடுவார்கள். வட இந்தியர்கள் வேறு யாருக்கும் ஓட்டு போடுவார்கள், மோடிஜி என்று தான் பேசுவார்கள் என தெரிவித்தார்.