Categories
கிரிக்கெட் விளையாட்டு

இப்படி பண்ணிட்டியே…!… ”நாங்க எப்படி விளையாடுறது” பும்ரா பாத்தா வேள ….!!

இந்திய பந்துவீச்சாளர் பும்ரா பயிற்சியின்போது மிடில் ஸ்டெம்பை உடைத்த புகைப்படத்தை தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்

இந்திய அணியின் முன்னணி பந்துவீச்சாளராக திகழும் பும்ரா தோள்பட்டையில் ஏற்பட்ட காயணம் காரணமாக தென் ஆப்பிரிக்கா, வங்கதேச அணிகளுக்கு எதிரான தொடர்களில் பங்கேற்காமல் இருந்தார். இதனால், அவருக்கு பதிலாக இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்த உமேஷ் யாதவ் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்த நிலையில், தற்போது இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான மூன்று போட்டிகள் அடங்கிய டி20, ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இந்தத் தொடருக்கான இந்திய அணியிலும் பும்ராவின் பெயர் இடம்பெறவில்லை.

Bumrah

இந்நிலையில், காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள அவர், இன்று வழக்கம் போல் வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது தனது மிரட்டலான பந்துவீச்சினால் மிடில் ஸ்டெம்ப் உடைந்த புகைப்படத்தை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், பயிற்சியும் முடிந்தது ஸ்டெம்பும் முடிந்தது என குறிப்பிட்டிருந்தார். பும்ரா பதிவிட்ட இந்தப் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.

கடைசியாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய பும்ரா, ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனைப் படைத்திருந்தார். தற்போது அவரது ட்விட்டர் பதிவால் இந்திய அணிக்கு பும்ரா எப்போது கம்பேக் தருவார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Categories

Tech |