செய்தியாளர்களை சந்தித்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி, அனைத்திந்திய அண்ணா திராவிட கட்சி ஆனது ஆட்சிக்கு வந்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை கண்டறிந்து வேண்டிய உதவிகளை செய்வார்கள். ஆனால் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தால் அவங்களுக்கு வேண்டுபட்டவங்களுக்கு செய்வாங்க. இப்படி பாதிக்கப்பட்டிருக்கிற காலகட்டத்தில் மட்டும் தான் இப்படிபட்டசெயல்ல ஈடுபடுவாங்க.
பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு என்ன நஷ்ட ஈடு வழங்குவார்கள் என்ற கேள்விக்கு,
இன்றைய அரசாங்கம் தான் நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்டது என்னென்ன பயிர்கள் என்பதை கண்டுபிடித்து, அந்த பயிர் விளைச்சல் எவ்வளவு நாள் கொடுக்கும் என்பதை ஆராய்ந்து, எவ்வளவு நிதி வழங்க வேண்டும் என்பதை துறை சார்ந்த அதிகாரிகள் நிர்ணயிக்க வேண்டும். அதற்கு தகுந்தார் போல் அரசாங்கம் நிதி உதவி வழங்க வேண்டும்.
நாங்க ஆதனூர் குமாரபாளையத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒரு தடுப்பணை கட்டினோம். இந்த தடுப்பணையில் சுமார் 7.7 கன அடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். நாங்க கடல்ல வீணா போய் கலக்குற தண்ணீரை சேமித்து வைக்கணும் என்பதற்காக தடுப்பணை கட்டினோம்.
நான் முதல்வராக இருந்த காலகட்டத்திலேயே மேட்டூர் அணையில் திறக்கப்படும் உபரி நீர் வீணாக கலக்கப்படுவதை தடுப்பதற்காக 3 இடங்களை தேர்வு செய்து தடுப்பணை அமைக்க முடிவு செய்தோம். அது தொடர்பாக நாங்கள் அறிவித்தோம். ஆனால் ஆட்சி மாறியதால் தடுப்பணைகள் கட்ட முடியவில்லை. இந்த அரசு தடுப்பணைகளை கட்டுவதற்கான நடவடிக்கைகளை கைவிட்டு விட்டனர் என தெரிவித்தார்.