தேனி மாவட்டத்தில் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்த தச்சு தொழிலாளி மீது அரசு பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள பாரதியார் நகரில் தச்சு தொழிலாளியான முருகன்(50) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் முருகன் வேலையை முடித்துவிட்டு பேருந்து நிலையத்திலிருந்து வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்துள்ளார். இதனையடுத்து பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வரும்போது எதிர்பாராத விதமாக அப்பகுதியில் வந்த அரசு பேருந்து முருகன் மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில் முருகன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து வந்த கம்பம் வடக்கு போலீசார் முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அரசு பேருந்து ஓட்டுநரான பாஸ்கரன்(45) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.