Categories
மாநில செய்திகள் விருதுநகர்

ரேஷன் கடையில் தரமற்ற அரிசி….. இதுதான் எங்க உணவா….? வேதனையில் மக்கள்….!!

விருதுநகர் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி வழங்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஏழை எளிய மக்கள் உணவின்றி கஷ்டப்படும் அவலம் ஏற்படும் என்பதை உணர்ந்த தமிழக அரசு அனைத்து ரேஷன் கடைகளிலும் ரூபாய் 1000 நிவாரணத் தொகையும், அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை விலை இல்லாமல் வழங்குமாறும் உத்தரவிட்டது. அந்த வகையில், விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை பகுதி வாரியாக 99 சதவிகிதம் பேருக்கு நிவாரணத் தொகையாக ரூபாய் 1000 வழங்கப்பட்டுவிட்டது.

விலையில்லா அத்தியாவசிய பொருட்களான சர்க்கரை அரிசி பாமாயில் உள்ளிட்டவை டோக்கன் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக வழங்கப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அதாவது பெரும்பாலான ரேஷன் கடைகளில் சர்க்கரை வழங்கப்படுவதில்லை என்றும் அரிசி அனைத்து ரேஷன் கடைகளிலும் வழங்கப்பட்டாலும் அது சிறிதளவுகூட பயன்படுத்த முடியாத அளவிற்கு தரமற்றதாக இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் திமுக எம்.எல்.ஏவிடம் மனு அளிக்க அவர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து ரேஷன் அரிசி வினியோகத்தை தவிர்க்குமாறு வலியுறுத்தியதோடு சரியான ஆய்வு மேற்கொண்டு அதற்குப்பின் தரமான அரிசியை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தார். ஆனால் ஆய்வுக்கு பின்பும் தரமற்ற அரிசி மீண்டும் விநியோகிக்கப்பட்டது. அரசு எந்த நோக்கத்திற்காக இலவச பொருட்களை வழங்கி வந்ததோ அந்த நோக்கமே தரமற்ற அரிசியால் வீணாகிவிட்டது. தற்போது மீண்டும் மாவட்ட நிர்வாகம் ரேஷன் கடைகளில் தரமான அரிசியை வழங்கல் துறை மூலம் உடனடியாக வழங்க வேண்டும் என்றும், தரமற்ற அரிசியை முடக்கி வைக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

Categories

Tech |