தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, சரத்குமார், பிரகாஷ் ராஜ், குஷ்பூ உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில், ரஞ்சிதமே, தீ தளபதி, அம்மா சென்டிமென்ட் பாடல் போன்றவைகள் வாரிசு படத்திலிருந்து ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் வாரிசு திரைப்படத்தில் இடம்பெற்ற தீ தளபதி பாடலை நடிகர் சிம்பு சம்பளம் வாங்காமல் பாடியிருந்தார். இந்த பாடலுக்கு சாண்டி மாஸ்டர் நடனம் அமைத்திருந்தார். இவருக்கு நடிகர் விஜய் தற்போது பூங்கொத்துடன் ஸ்வீட் அனுப்பி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை சாண்டி மாஸ்டர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதோடு நன்றி விஜய் சார். மிகச் சிறந்த பரிசு. இதனால் தான் அவர் தளபதி என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த பதிவு மற்றும் புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.