Categories
சினிமா தமிழ் சினிமா

இதற்கு தான் விஜய்யை ”ஐயா” என அழைத்தேன்…. கமல்ஹாசன் விளக்கம்…. நீங்களே பாருங்க….!!!

இதற்கு தான் விஜய்யை ”ஐயா” என அழைத்தேன் என கமல்ஹாசன் விளக்கமளித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கமல்ஹாசன். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”விக்ரம்”. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது.

மேலும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சாதனை படைத்து வருகிறது. இதனையடுத்து இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து கமல் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்கு காரை பரிசாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சிறப்பு தோற்றத்தில் நடித்த சூர்யாவுக்கும் கமல்ஹாசன் அன்பு பரிசை வழங்கினார்.

At present, Kamal Haasan is confused as to why actor Vijay is called Aiya  Vijay. | 'ஐயா விஜய்' - நடிகர் கமல்ஹாசன் விளக்கம்..!

இந்நிலையில் இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கமல் நடிகர் விஜய்யை ‘ஐயா’ என அழைத்தார். அதன்படி, ”விஜய் ஐயா கால்ஷீட் கொடுத்தால் உடனே பட வேலைகளைத் தொடங்கலாம்” என கமல் கூறினார்.

இதற்கு நிருபர் ஒருவர், ‘விஜய்யை ஏன் ஐயா என அழைத்தீர்கள்?’ என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த கமல், ”மரியாதை நிமித்தமாக தான் நான் அவரை ஐயா என அழைத்தேன்”. ‘நடிகர் சிவாஜி கணேசன் கூட என்னை கமல் ஐயா என்றுதான் அழைப்பார்’ என கமல்ஹாசன் விளக்கமளித்துள்ளார் .

Categories

Tech |