காற்றுக்கென்ன சீரியலிருந்து விலகியதற்கான காரணத்தை தர்ஷன் கூறியுள்ளார்.
விஜய் டிவியில் ஓடிக் கொண்டிருக்கும் பிரபலமான சீரியல்களில் ஒன்று ”காற்றுக்கென்ன வேலி”. இந்த சீரியலுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. சமீபத்தில், இந்த சீரியலின் நாயகன் தர்ஷன் இந்த சீரியலிருந்து விலகினார். இதனையடுத்து, இந்த சீரியலில் இருந்து ஏன் விலகுனீர்கள் என அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர் ஒருவர் கேள்வி கேட்டுள்ளார்.
அதற்கு பதிலளித்த அவர், ”நான் வேறு ஒரு ப்ராஜெக்ட்டிலும் இருக்கிறேன். இரண்டிற்கும் நேரம் ஒதுக்குவது மிகவும் கடினமாக உள்ளது எனவும், காற்றுக்கென்ன வேலி சீரியலில் என்னுடைய ஹேர் ஸ்டைலை மாற்றி விட்டதால் அது எனக்கு பிடிக்கவில்லை என்பதாலும் இந்த சீரியலில் இருந்து விலகினேன் என பதிலளித்துள்ளார்.