நாமக்கல் மாவட்டத்தில் உழவர் சந்தை நேற்று நடைபெற்ற நிலையில் 3 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய்க்கு காய்கறி பழங்கள் விற்பனை செய்யப்பட்டுளள்து.
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு நாமக்கல்-கோட்டை சாலையில் உழவர் சந்தை 50% விவசாயிகளுடன் செயல்பட்டு வருகின்றது. இங்கு நாமக்கல் மற்றும் சுற்றுவட்டார காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில் ஒருநாள் விட்டு ஒருநாள் இந்த உழவர் சந்தையில் விவசாயிகள் அவர்கள் விளைவித்த காய்கறிகளை விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று நடைபெற்ற சந்தையில் மொத்தம் 10 டன் காய்கறி வகைகள் மற்றும் 1 டன் பழ வகைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து நேற்று உழவர் சந்தையில் 1 கிலோ தக்காளி 28 ரூபாய்க்கும், வெங்காயம் 32 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் 45 ரூபாய்க்கும், கேரட் கிலோ 68 ரூபாய்க்கும், வெண்டைக்காய் கிலோ 24 ரூபாய்க்கும், கத்தரிகாய் 52 ரூபாய்க்கும், இஞ்சி கிலோ 80 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மொத்தம் 3 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும் காய்கறிகளின் வரத்து குறைவால் விலைகள் சற்று உயர்ந்துள்ளதாக உழவர் சந்தை அதிகாரிகள் கூறியுள்ளனர்.