தயிருடன் கஸ்தூரி மஞ்சளை சேர்த்து பயன்படுத்தும் போது நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்று பார்க்கலாம்.
கஸ்தூரி மஞ்சளை நாம் அன்றாடம் பயன்படுத்தும் போது நமக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. இதை நம்முடைய முகத்திற்கும் பயன்படுத்தும் போது முகம் பொலிவு பெறுகிறது. மேலும் உடலில் உள்ள கிருமிகளை நீக்கவும் கஸ்தூரி மஞ்சள் பயன்படுகிறது. இது ஒரு இயற்கை மருந்துப் பொருளாகும். மேலும் கஸ்தூரி மஞ்சளோடு தயிர் சேர்த்து பயன்படுத்துவதாலும் பல நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன.
இரண்டு ஸ்பூன் தயிருடன் கால் ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் சேர்த்து காலை, மாலை சாப்பிட பின்வரும் நன்மைகள் உண்டு.
1.அல்சர் குணமாகும்.
2.தோல் நோய்களைப் போக்கும் .
3.உடலில் தேவையற்ற முடி வளர்வதை தடுக்கிறது.
4.நுரையீரல் நோய்களை குணப்படுத்தும்.
5.இரத்தத்தை சுத்தப்படுத்தி உடலில் சேர்ந்த கிருமிகளை வெளித்தள்ளும்.