Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இந்த சட்டத்தை கைவிட வேண்டும்… மத்திய தொழிற்சங்கத்தினர்… மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் தொழிற்சங்கத்தினர் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பூங்கா சாலையில் மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட துணை செயலாளர் சிவராஜ் மற்றும் தொ.மு.ச. மாவட்ட கவுன்சில் செயலாளர் பழனிப்பன் ஆகியோர் தலைமை தங்கியுள்ளனர்.

இதனையடுத்து தொ.மு.ச. மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி, சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் வேலுசாமி, ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட பொது செயலர் தனசேகர் உள்பட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையை திரும்ப பெற வேண்டும் என்றும், 41 ராணுவ பாதுகாப்பு ஆயுத உற்பத்தி பொதுத்துறை ஆலைகளை 7 நிறுவனங்களாக பிரித்து தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து மோட்டார் வாகன சட்டங்களையும் கைவிட வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர். மேலும் பள்ளிபாளையம் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தொ.மு.ச. நிர்வாகி புகழேந்தி தலைமை தங்கியுள்ளார். இந்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பியுள்ளனர்.

Categories

Tech |