Categories
தேசிய செய்திகள்

“இந்த லெட்டரை கண்டிப்பா எல்லோரும் படிங்க”… மோடி விடுத்த வேண்டுகோள்..!!

மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் விவசாயி சங்கங்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தைத் சுட்டிக்காட்டி அனைவரும் இதை படிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதிய விவசாய சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று 23 ஆவது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் இந்த போராட்டத்தில் சிங்கு, டிகிரி, காசிப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நேற்றும் இன்றும் டிராபிக் அதிகமாக இருந்ததால் டெல்லியில் உறைய லம்பூர், சோபியா பாத் உள்ளிட்ட வழிகளை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் விவசாயிகளுடன் மத்திய அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எட்டப்படவில்லை. அதன் ஒருபகுதியாக மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் விவசாய சங்கத்தில் நேற்று ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில் குறைந்த பட்ச ஆதார விலை குறித்து எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக கடந்த ஆறு ஆண்டுகால மோடி ஆட்சியில் எண்ணற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

நானும் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். அதனால் அவர்கள் படும் துயரத்தை குழந்தைப் பருவத்திலிருந்தே நான் நன்கு அறிவேன். விவசாயிகள் மத்தியில் பதற்றத்தை உருவாக்கும் வகையில் காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது. பொய்யான குற்றச்சாட்டுகளை யாரும் நம்ப வேண்டாம். விவசாயிகள் டெல்லி எல்லையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருவதால், நம் நாட்டை காக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் ராணுவ வீரர்களுக்கு உணவு பொருட்களை அனுப்ப முடியவில்லை என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் நரேந்திர சிங் தோமர் விவசாய சகோதர சகோதரிகளுக்கு 8 பக்க அளவிற்கு வேளாண் சட்டங்களை குறித்த நன்மைகளை எடுத்துக் காட்டி கடிதம் எழுதியிருந்தார். இதனை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி நாட்டு மக்கள் அனைவரும் இந்த கடிதத்தை படிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Categories

Tech |