Categories
உலக செய்திகள் வைரல்

“தாயை இடித்து கீழே தள்ளிய கார்”… கோபத்தில் காரை உதைத்து சண்டைக்கு சென்ற சிறுவன்… வைரலாகும் வீடியோ.!!

சாலையில் சென்ற தாயை கார் இடித்து கீழே தள்ளியதை பார்த்த சிறுவன் கோபத்துடன் காரை உதைக்கும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

சீனாவில் சாலையில் சென்ற தனது தாயை கார் இடித்து கீழே தள்ளியதை பார்த்த சிறுவன் ஆக்ரோஷமாக காரை தாக்கும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. காணொலியில், சாலையில் தாய், மகன் இருவரும் நடந்த சென்றுகொண்டிருந்தனர். அப்போது சிக்னலை மதிக்காமல் வேகமாக சென்ற கார், இருவரையும் இடித்து கீழே தள்ளியது. விபத்தில் தனது தாய் வலியில் துடிப்பதை பார்த்த சிறுவன், பொங்கியெழுந்து காரை உதைக்கும் காட்சி வைரலாயியுள்ளது.

Image result for This little boy in China is his mummy's big hero - he vented his anger at a car that sent his mum flying

மேலும், சிறுவன் கார் ஒட்டுநரிடம் சண்டைக்கு செல்ல முயன்றான். பின்னர், சிறுவன் ஒடிச் சென்று தாயை கட்டி அணைத்து கொண்டான். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து காவல்துறை கூறுகையில், விபத்து ஏற்பட்டதற்கு ஓட்டுநரே முழு காரணம் எனத்தெரிவித்தனர். சின்னஞ்சிறு குழந்தையின் பாசமான செயல் பார்ப்போரை கண்கலங்க வைக்கிறது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Categories

Tech |