Categories
தேசிய செய்திகள்

“இந்த மனசு தான் கடவுள்” நெஞ்சு வலியால் மயங்கி விழுந்த விவசாயி…. சிபிஆர் செய்து காப்பாற்றிய போலீஸ்….. குவியும் பாராட்டு…..!!!!

ஆந்திர மாநிலத்தில் அமராவதியை தலைநகராக அறிவிக்க வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதாவது சந்திரபாபு நாயுடுவின் ஆட்சிக்காலத்தில் அமராவதியை தலைநகராக மாற்றுவதற்கு விவசாயிகள் நிலம் கொடுத்துள்ளனர். ஆனால் இதுவரை அமராவதியை தலைநகராக மாற்றாததால் நிலம் கொடுத்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள காமன் இந்தியா பாலத்தின் மீது போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் ஊர்வலமாக சென்று கொண்டிருந்தனர்.

அப்போது ஒரு விவசாயிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் மயங்கி விழுந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த விவசாயிகளும் பொதுமக்களும் அவரை காப்பாற்ற முயன்றனர். அப்போது பாதுகாப்பில் இருந்த இன்ஸ்பெக்டர் திரிநாத் நெஞ்சுவலி ஏற்பட்ட விவசாயிக்கு சிபிஆர் செய்து அவரைக் காப்பாற்றினார். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளும் பொதுமக்களும் இன்ஸ்பெக்டருக்கு தங்களுடைய நன்றிகளை தெரிவித்தனர். ‌ மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வரும் நிலையில் இன்ஸ்பெக்டருக்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும், தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |