இந்த படங்களும் ஓடவில்லை என்றால் திரையரங்கை இழுத்து சாத்தி பூட்டி விட்டு செல்ல திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
ஊரடங்கால் மூடப்பட்ட திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டும் முன்பிருந்த அளவிற்கு தற்போது கூட்டம் வராததால் தியேட்டர் உரிமையாளர்கள் சோகத்தில் உள்ளனர். அது மட்டுமின்றி சில திரைப்படங்கள் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடப்படுவதால் திரையரங்குகளுக்கு ரசிகர்கள் வருவார்களா என்ற சந்தேகம் மேலும் அதிகரித்துள்ளது.
ஆனால் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதனால் தியேட்டர் உரிமையாளர்கள் சிறிது சந்தோசத்தில் இருந்தனர். இந்நிலையில் மீண்டும் திரையரங்குகளில் கூட்டம் வராததால் கவலையுடன் உள்ளனர். இவர்களின் கவலையைப் போக்க வேண்டுமென்றால் முன்னணி நடிகர்களின் படங்கள் கட்டாயம் திரையரங்குகளில் வெளியாக வேண்டும்.
அதன் படி கார்த்தியின் சுல்தான் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. மேலும் கொரில்லா VS கொரில்லா படமும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்திற்கும் கூட்டம் வரவில்லை என்றால் திரையரங்குகளை இழுத்து சாத்தி பூட்டிவிட்டு பின்னால் திருமண மண்டபமாக மாற்றிவிட தியேட்டர் உரிமையாளர்கள் சிலர் முடிவு செய்துள்ளார்கள்.