தமிழக அரசு அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழக முழுவதும் கிராம சபை கூட்டங்களை நடத்த அனுமதி அளித்துள்ளது. மேலும் சுழற்சி முறையை பின்பற்றி காலை 11 மணி அளவில் கிராம சபை கூட்டங்களை நடத்த உத்தரவிட்டுள்ளது. கிராம சபை கூட்டம் நடைபெற அனைத்து ஊராட்சிகளிலும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும். கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் டெங்கு பரவுவது பற்றி விவாதிக்க கூட்டத்தில் அறிவுறுத்த வேண்டும்.
அது மட்டும் இன்றி வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் கிராம சபை கூட்டத்தில் விவாதிக்க வேண்டும். மேலும் இந்த கிராம சபை கூட்டம் தொடர்பான விரிவான அறிக்கை அக்டோபர் 12ம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்ப வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் காந்தி ஜெயந்தி தினத்தன்று மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் கிராம சபை கூட்டத்தில் அந்தந்த கிராமங்களில் செயல்படும் நியாய விலை கடைகளின் ஆவணங்களை சமூக தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும்.
முன்னுரிமை குடும்ப அட்டைதாரர்களின் பட்டியலை கிராம சபை முன்பு தாக்குதல் செய்து ஒப்புதல் பெற வேண்டும் என்று உணவு வழங்கல் துறை தெரிவித்துள்ளது. மேலும் கிராமசபை கூட்டங்களில் தரப்படும் புகார்களை 1 வாரத்தில் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக தணிக்கைக்கு சமர்ப்பிக்கப்பட்ட சான்றுகள், பெறப்பட்ட புகார் உள்ளீட்டு விபரங்களை கிராம சபை கூட்டம் முடிந்த ஐந்து நாட்களுக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.