ஏலக்காய் ஒன்று போதும் 14 நாட்களில் உங்கள் உடல் எடையை குறைக்க முடியும் இதை பற்றி விரிவாக இதில் பார்ப்போம்.
உடல் எடை அதிகரிப்பதற்கு பல காரணங்கள் உண்டு. 100% சரியானது, நீங்கள் சரியான அளவு தண்ணீரை குடித்தால் உங்களது உடலின் வளர்சிதை மாற்ற விகிதம் சீரானதாக இருக்கும். தண்ணீரை மட்டும் குடிப்பதன் மூலம் உடல் எடையை குறைக்க முடியாது. நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால் 14 நாட்களில் இந்த ஏலக்காய் நீரை குடியுங்கள். ஏலக்காய் தேனீர் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இன்று ஏலக்காய் தண்ணீரின் நன்மைகளைப் பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்.
ஏலக்காய் நன்மைகள்
ஏலக்காயில் என்ன ஊட்டச்சத்துக்கள் உள்ளது என்றால் உடல் எடையை குறைக்க ஏதுவாக மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் மற்றும் பல வகை தாதுக்கள் இதில் உள்ளது. இவை ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. கபம், வாயு மற்றும் சிறுநீர் வெளியேறுவதும், எரியும் உணர்வு இருந்தால் அதனையும் இது சரி செய்கின்றது. இது தவிர உங்களிடம் உடலில் இருக்கும் கொழுப்புகளை கரைக்கிறது. உடல் எடையை குறைக்கிறது. ஏலக்காய் நுகர்வு உங்கள் கொழுப்பின் அளவை குறைத்து உணவை ஜீரணிக்க உதவுகிறது. நீங்கள் இதை பயன்படுத்தினால் உங்கள் உடல் எடை குறைய தொடங்கும்.
எப்படி செய்வது
ஏலக்காயை உரித்து அதன் விதையை தண்ணீரில் ஊறவைத்து காலையில் அதனை சூடாக்கி குடிக்க வேண்டும். இதை ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்தால் உங்கள் எடை வேகமாக குறைய தொடங்கும். 5 முதல் 6 ஏலக்காய் விதைகளை ஒரே இரவில் தண்ணீரில் ஊற வைக்கவேண்டும். இதை ஒவ்வொரு நாளும் செய்துவர 14 நாட்களில் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றத்தை நீங்களே பார்ப்பீர்கள். இந்த நீர் உங்கள் பசியைக் கட்டுப்படுத்தும் எடையை குறைப்பதோடு அந்த தண்ணீர் குடிப்பது சருமத்தை பளபளப்பாக்கும்.