அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளார்கள்.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகர் ஆக வலம் வருகின்றார் அஜித் குமார். வலிமை படத்திற்குப் பிறகு அஜித் மற்றும் எச். வினோத் இயக்கத்தில் மீண்டும் ஒரு படம் உருவாகி வருகிறது. வலிமை படத்தின் வெற்றியால் இருவரும் மீண்டும் இணையும் புதிய படம் தொடர்பான செய்திகள் ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி வருகின்றது. இத்திரைப்படத்திற்கு துணிவு என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் மஞ்சுவாரியார், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர் மகாநதி, சங்கர், ஜான், குக்கர் உள்ளிட்டோர் ஒரு முக்கிய இடத்தில் நடிக்கின்றார்கள். இந்த நிலையில் அஜீத்தின் புகைப்படம் ஒன்றை இணையத்தில் வைரலாகி வருகின்றது. முதலில் புத்தர் சிலை முன்பு அஜித் தனது பைக் கூட நிற்கும் புகைப்படம் வெளியான நிலையில் தற்போது அஜித் பைக்கில் சாகசம் செய்யும் புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கின்றது. அடுத்தடுத்து புகைப்படம் வெளியாவதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளார்கள்.