Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சளி , இருமல் , மூக்கடைப்பை விரட்ட இந்த ஒரு பொடி போதும் ….

கொள்ளுப்பொடி

தேவையான பொருட்கள் :

கொள்ளுப்பயிறு – 1/4 கிலோ

மிளகு – 1 டீஸ்பூன்

சீரகம் –  1 டீஸ்பூன்

பூண்டு – 20 பற்கள்

மிளகாய் வற்றல் – 5

புளி – நெல்லிக்காயளவு

கறிவேப்பிலை – சிறிது

பெருங்காயம் – சிறிது

உப்பு – தேவைக்கேற்ப

கொள்ளுப்பொடிக்கான பட முடிவுகள்

செய்முறை :

முதலில் கொள்ளுப்பயிரை வறுத்துக் கொள்ளவேண்டும் . பின் கடாயில் மிளகு , சீரகம் , மிளகாய் வற்றல் , பெருங்காயம் , கறிவேப்பிலை சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும் . கடாயில் எண்ணெய் சேர்த்து பூண்டை போட்டு வதக்கி  பின் புளியை தனியே வதக்கிக்  கொள்ள வேண்டும் . உப்பையும் வறுத்துக் கொள்ள வேண்டும் .  பின்னர் இவை  அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கலந்து அரைத்துக் கொள்ள வேண்டும் . இப்போது மருத்துவ குணங்கள் நிறைந்த கொள்ளுப்பொடி தயார் !!!

 

 

 

Categories

Tech |