Categories
மாநில செய்திகள்

இன்னும் 3 தினங்களில்… தொடங்குகிறது இந்த சேவை… மகிழ்ச்சியில் மக்கள்…!!

வரும் செப்டம்பர் 7ஆம் தேதி முதல் தனியார் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து இயக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் பொதுப் போக்குவரத்து என்பது தொடங்கி 3 நாட்கள் ஆன நிலையில் தனியார் பேருந்துகள் இயக்கப்படுவதற்காக பேருந்து உரிமையாளர்கள் அரசிடம் வைத்த கோரிக்கையின் பேரிலும், பொதுமக்கள் வியாபார நிமித்தமாக வெளியூர் சென்று வர அதிக சிரமம் ஏற்பட்டுள்ளதாக வைத்த கோரிக்கையை அடிப்படையிலும், வருகின்ற 7 தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்துகளும் தனியார் பேருந்துகளும் இயக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஆனால், பொதுமக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, பாதுகாப்பான முறையில் பயணங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது. ஐந்தரை மாதங்களுக்குப் பின்னர், மாவட்டங்களுக்கு இடையே பேருந்து சேவை தொடங்கப்பட இருப்பதால், அதிகளவில் பயணிகள் போக்குவரத்து நடைபெறும் சூழல் உள்ளது. பணி நிமித்தமாகவும், வர்த்தக ரீதியாகவும் இனி வெளியூர் செல்வதற்கு எந்த ஒரு சிரமமும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |