வீட்டின் உணவுப் பொருட்களில் பூச்சி வராமல் இருக்க இதை செய்ய வேண்டும்
பருப்புகளில் லேசாக பெருங்காயத்தை தட்டிப் போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.
அரிசியில் மிளகாய் வற்றல் சிலவற்றை போட்டு வைத்தால் வண்டு பிடிக்காது.
உளுந்தம் பருப்பை வாங்கியதும் அதை முறத்தில் போட்டு தட்டினாள் , மாவு மாதிரியான பொருள் வெளியேறும் தட்டிய பிறகு கிண்ணத்தில் வைத்தால் வண்டு வராது.
துவரம் பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பில் பூச்சி வராமல் இருக்க காய்ந்த வேப்ப இலை போட்டு வைத்தால் போதும். உளுந்தம் பருப்பு எனில் மஞ்சள் தூளும் உப்பும் கலந்து வைக்கலாம்.
மிளகாய் பொடியில் வண்டு வராமல் இருக்க துணியில் சிறிது பெருங்காயத் துண்டை வைத்து மூட்டையாக கட்டி மிளகாய்பொடி கிண்ணத்தில் போட்டு வைத்தால் வண்டுகள் வராது.
பிரியாணி அரிசியில் சிறிதளவு உப்பு கலந்து நிழலில் உலர்த்தி பத்திர படுத்தினாள் வண்டுகள் பூச்சிகள் கூடுகள்.
கோதுமை உள்ள கிண்ணத்தில் ஒரு கொத்து வெந்தயக் கீரையை போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.
புளியை வாங்கி வந்ததும் அதில் உள்ள கொட்டைகளையும் , நார்களையும் நீக்கிவிட்டு நன்கு வெயிலில் காய விட்டு சிறிது கல் உப்பு சேர்த்து ஜாடியில் அடைத்துவிட்டால் ஓராண்டுக்கு மேல் புழுக்கள் பூச்சிகள் வராமல் இருக்கும்.
தூண்டில் புழு வராமல் இருக்க அதில் கேழ்வரகை சிறு மூட்டையாக கட்டி போடலாம்.
சமையலறையில் உள்ள அலமாரியில் வேப்பிலைகளை பரப்பி அதன்மீது பேப்பர் போட்டு மளிகை சாமான்களை வைத்தால் பூச்சி வராமல் தடுக்கலாம்.