Categories
மாநில செய்திகள்

“இனி இதை செய்யக்கூடாது”…. தமிழகம் முழுதும் காவல்துறையினருக்கு பறந்த உத்தரவு…. டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி….!!!!!

இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்களை தடுப்பதற்காக கடந்த 2012-ம் ஆண்டு ஒன்றிய அரசு போக்சோ சட்டத்தினை இயற்றியது. இந்த சட்டத்தின் படி குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர்களுக்கு 7 வருடங்கள் சிறை தண்டனையும், ஆயுள் தண்டனையும் கொடுக்கப்படும். அதன் பிறகு பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தால் 10 வருடங்கள் சிறை தண்டனையும், ஆயுள் தண்டனையும் கொடுக்கப்படும். இந்த போக்சோ சட்டங்கள் இயற்றப்பட்டாலும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

இந்நிலையில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் மாநகர காவல் ஆணையர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் உயர் நீதிமன்றத்தின் சிறுவர் நீதிக்குழு மற்றும் போக்சோ குழு ஆகியோர் போக்சோ சட்டத்தை ஆய்வு செய்து புலனாய்வு செய்யும் அதிகாரிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர். எனவே திருமண உறவு மற்றும் காதல் உறவு போன்ற போக்சோ வழக்குகளில் அவசரப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கக் கூடாது.

அதற்கு பதிலாக சம்மன் அனுப்பி விசாரணை நடத்தலாம். அதன் பிறகு குற்றம் சாட்டப்பட்ட நபர் கைது செய்யப்பட்ட விவரம் மற்றும் அதற்கான காரணத்தை எப்ஐஆரில் பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என்றால் மாவட்ட கண்காணிப்பாளரின் அனுமதி பெற வேண்டும். அதன் பிறகு முக்கியமான வழக்குகளில் உள்ள குற்றப்பத்திரிக்கையை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்வதோடு, மேல் நடவடிக்கை கைவிடப்படும் வழக்குகளில் வழக்கு கோப்பினை தீவிரமாக ஆய்வு செய்து அறிவுரை வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |