சென்னை மாநகராட்சி நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள கழிவு நீர் தொட்டிகள் மற்றும் செப்டிக் டேங்க் போன்றவற்றை சுத்தம் செய்வதற்கு தனி நபர்களை ஈடுபடுத்த கூடாது. இதை மீறுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். அதன் பிறகு ஒருவர் கழிவு நீர் தொட்டி மற்றும் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் போது மரணம் அடைந்து விட்டால் அதற்கான முழு பொறுப்பையும் சம்பந்தப்பட்ட நபர் ஏற்பதோடு, இறந்தவரின் வாரிசுதாரர்களுக்கு 15 லட்ச ரூபாய் இழப்பீடும் வழங்க வேண்டும்.
எனவே அடுக்குமாடி கட்டிடத்தில் குடியிருப்பவர்கள் மற்றும் வீடுகளில் வசிப்பவர்கள் இயந்திரங்கள் உதவியோடு மட்டும் தான் கழிவு நீர் தொட்டிகள் மற்றும் செட்டிக் டேங்க் போன்றவற்றை சுத்தம் செய்ய வேண்டும். இது தொடர்பான புகாரை மாநகராட்சியின் கட்டணமில்லா தொலைபேசி எண் 14420-க்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். மேலும் தமிழகத்தில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயுத்தாக்கி உயிரிழக்கும் சம்பவம் சமீப காலமாக அரங்கேறி வருகிறது. சமீபத்தில் கூட ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்து கொண்டிருந்த 3 பேரை விஷவாயு தாக்கியது என்று செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.