ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்ட விரோதமாக டிராக்டரில் மணல் அள்ளிவந்த 2 பேரை கைது செய்த போலீசார் மணலையும் பறிமுதல் செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகரித்து வரும் மணல் கடத்தலால் காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கமுதி அபிராமம் பகுதியில் இன்ஸ்பெக்டர் கலைவாணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரிட்டோ, ராஜாராம், தனிப்பிரிவு ஏட்டு லிங்கராஜ் மற்றும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து அப்பகுதியில் மணல் அள்ளிவந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அனுமதியின்றி மணல் கடத்தியது தெரியவந்துள்ளது. மேலும் டிராக்டரில் இருந்த அதே பகுதியை சேர்ந்த அன்புராஜ்(35) மற்றும் பிரதாப்(28) ஆகியோரை கைது செய்து விசரனை நடத்தி வருகின்றனர்.